ENGW vs WIW, 2nd ODI: மீண்டும் சதம் விளாசிய ஜோன்ஸ், பியூமண்ட்; இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!

Updated: Wed, Jun 04 2025 21:14 IST
Image Source: Google

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று லெய்செஸ்டரில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு ஏமி ஜோன்ஸ் மற்றும் டாமி பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட எதிரணி பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏமி ஜோன்ஸ் இப்போட்டியிலும் சதத்தை விளாச, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 106 ரன்களை எடுத்த கையோடு ஜோன்ஸ் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

அதன்பின் பியூமண்டுடன் இணைந்த எம்மா லாம்பும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் டாமி பியூமண்ட் சத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் எம்மாவும் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் 20 பவுண்டரிகளுடன் 129 ரன்களை எடுத்திருந்த நிலையில் பியூமண்ட ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிட கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 12 ரன்னிலும், எம்மா லாம்ப் 55 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய சோஃபியா டங்க்லி 31 ரன்னிலும், அலிஸ் கேப்ஸி 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனு பெவிலியன் திரும்பினர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 366 ரன்களை சேர்த்தது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கரிஷ்மா ராம்ஹராக் மற்றும் அலியா அலீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியானது விளையாடவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவிவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை