இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!

Updated: Tue, Aug 22 2023 20:35 IST
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடப்பாண்டு இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலக கிரிக்கெட் திருவிழா 45 நாட்கள் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது .

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த அணிகள் உலகக்கோப்பையின் அரை இறுதிகளுக்கு தகுதி பெறும் மற்றும் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது போன்ற கணிப்புகளில் இப்போதே ஈடுபட தொடங்கிவிட்டனர் .

இதில் பெரும்பாலான விமர்சகர்களின் கருத்தாக இருப்பது இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகும் . இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து பேசிய ஈயான் மோர்கன், “உலகக் கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சாதகமான விஷயமாக அமைந்திருக்கிறது . மேலும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர் ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது அதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும்.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணியின் வீரர்களும் ஒரு நாள் போட்டிகளில் சமீபத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணிக்கு இருக்கிறது. 

சரியான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை கொண்டு சம பலம் கொண்ட அணியாக இங்கிலாந்து வழங்குகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர்த்து பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமாக இருந்தாலும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளையும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. அந்த அணிகளும் பலமாகவே உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பற்றி பேசிய மோர்கன், “ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கேப்டனாகவும் விளங்கி வருகிறார். அவர் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருப்பது அணிக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. அவரது தலைமையிலான இந்தியா நிச்சயமாக இந்த வருடம் உலக கோப்பையை கைப்பற்றும்.  

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மிகப்பெரிய போட்டிகளில் தனது முழு திறமையையும் கொடுத்து விளையாடிய அணைக்கு வெற்றியை பெற்று தரக்கூடியவர். நிச்சயமாக இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியில் விராட் கோலிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை