விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!

Updated: Fri, Dec 30 2022 10:26 IST
Image Source: Google

இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். 

டி20 அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதேநேரம் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது நிரந்தரமா? தற்காலிகமா? என தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், 2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை கருத்தில் கொண்டு, துடிப்பான அணியாக டி20 அணியை உருவாக்க, சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம் என அண்மையில் நடந்த பிசிசிஐ மேல்மட்டக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்ததாக தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில், ஆசியகோப்பையின்போது மீண்டும் பார்மிற்கு திரும்பிய விராட் கோலி, டி20 உலககோப்பையில் 6 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 285 ரன்கள் அடித்தார். தரமான பார்மில் இருக்கும் இவரை எதற்காக இலங்கை அணியுடனான டி20 தொடரில் எடுக்கவில்லை? என கேள்விகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய சபா கரீம், “இலங்கை தொடரில் விராட் கோலி எடுக்கப்படாதது ஆச்சர்யமாக இருக்கிறது. டி20 உலககோப்பையையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அப்படி ஆடவில்லை என்றால், இந்தியாவின் நிலை என்னவாகியிருக்கும். டி20 போட்டிகளில் அவருக்கு கொடுத்த வேலையை அபாரமாக செய்தார். அவர் அணியில் இருந்தாலே அசுரபலம் தான். விராட் கோலியை தவிர, நீக்கப்பட்ட மற்ற வீரர்கள் மோசமாக செயல்பட்டவர்கள். அது நியாயமானது தான்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை