PAK vs NZ, 1st ODI: ஃபகர் ஸமான் சதத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்! 

Updated: Fri, Apr 28 2023 13:18 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள்  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் நேற்று தொடங்கியது. 

அதன்படி ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.  இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - சாட் பௌஸ் இணை  களமிறங்கியது. இதில் சாட் பௌஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, இயடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெரில் மிட்செல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

தையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். அதன்பின் 117 ரன்களைச் சேர்த்திருந்த அவர் ரச்ச்சின் ரவீந்திர பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதேபோல் இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர். 

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்ட நாயகன் விருது ஃபகர் ஸமானுக்கு அளிக்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை