இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!

Updated: Fri, Sep 10 2021 13:43 IST
Final England-India Test in Manchester cancelled due to Covid (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற இருந்தது. 

ஆனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் இன்று தொடங்குவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டியை ரத்துசெய்வதாக இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

தற்போதைய சூழலில் இன்று விளையாட சில இந்திய வீரர்கள் தயக்கம் காட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், ஐந்தாவது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை