கரோனாவிலிருந்து மீண்டார் ஃபின் ஆலன்!

Updated: Thu, Sep 02 2021 18:14 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து  ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி வங்கதேசம் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தி ஹண்ரட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இங்கிலாந்திலிருந்து நேரடியாக தாக்கா வந்தடைந்தார். 

அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

வங்கதேச தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தின் தி ஹண்ரட் தொடரில் பங்கேற்ற ஆலன், அந்நாட்டில் மேற்கொண்ட கரோனா பரிசோதனை முடிவில் நேகட்டிவ் ரிசல்டைப் பெற்று விமானத்தில் பயணித்துள்ளார்.இருப்பினும் வங்கதேசத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியானது.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஃபின் ஆலனுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கூடிய விரைவில் சக அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை