இந்தியாவுக்கு எதிராக முதல் முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த டிராவிஸ் ஹெட்!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிற்து. இதில் டஸ் வென்று முதலில் பேட்டிக் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமத்தது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயார்த்தினர். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தை பதிவுசெய்தார்.
அதன்பின் 72 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷாக்னே தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் மார்ஷ் 4 ரன்னிலும் என பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்து விளையாடி வரும் அலெக்ஸ் கேரியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக 0 ரன்னில் அவுட் ஆனார். இது தவிர, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக அவர் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. மேலும் இத்தொடாரில் முன்னதாக டிராவிஸ் ஹெட் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் 68.17 சராசரியில் 409 ரன்கள் எடுத்திருந்தார், அதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.