லீட்ஸை விடுங்கள்; லார்ட்ஸை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “4ஆவது டெஸ்ட் போட்டியில் சுலபமாக வெல்லலாம். இந்திய வீரர்கள் 3ஆவது டெஸ்ட் போட்டியை மறந்துவிட வேண்டும். நல்ல விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த போட்டியில் இங்கிலாந்து அணிதான் வெற்றிக்கு அருகில் இருந்தனர். பின்னர் அவர்களை வீழ்த்தினோம். எனவே அந்த நம்பிக்கையை நியாபகம் வைத்திருங்கள்.
வாய் வார்த்தையில் சொல்வது எல்லாம் சுலபமாக தான் இருக்கும் என்பதை நானும் அறிவேன். ஆனால் விளையாட்டு போட்டிகளில் தோல்விகள் சகஜம். ஆனால் அதை மறக்க வேண்டும். 3ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி பேட்டிங் வரிசையை வீழ்த்திவிட்டனர். இங்கிலாந்தின் பவுலிங் சிறப்பாக இருந்தது. அப்படி இருந்த போதே 2ஆவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கம்பேக் கொடுத்தனர். எனவே புதிதாக தொடங்கும் போட்டியில் நிச்சயம் பெரிய கம்பேக் கொடுப்பார்கள்.
மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி அவ்வளவு தான், கதை முடிந்தது என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுக்காக புதிய விஷயம் ஒன்று வரவுள்ளது. ஏனென்றால் இந்த தொடர் தற்போது 1- 1 என சமநிலையில் உள்ளது. போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடக்கிறது. இதில் தோல்வியடைந்தால் அவர்களுக்கு அவமானம். எனவே இங்கிலாந்து அணிக்கு தான் அதிக பிரஷர் உள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்துவிட்டோம். ஆகையால், தற்போது ஆட்டம் அவர்களின் மண்ணில், நாங்கள் போராடுவோம், அழுத்தம் அவர்களுக்குதான் என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.