நிறவெறி சர்ச்சை: மைக்கேல் வாஹன், டிம் பிரஸ்னன் மீது குற்றம் நிரூபனம்!
யார்க்ஷையர் அணிக்காக விளையாடிய பாகிஸ்தானை பூர்வீமாக கொண்ட் ஆசிம் ரசிக்கை நிறவெறியுடன் நடத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்க வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துவோம் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதன் பிறகு இந்தப் பிரச்சினை சூடு பிடிக்க தொடங்கியது. இதில் ஆசிம் ரஷிக் அளித்த புகாரில், யார்க்ஷையர் அணியில் நிறவெறி இருப்பதாக தெரிவித்தார்.
வீரர்கள் முதல் அணி நிர்வாகிகள் வரை தம் மீது நிறவெளியுடன் நடந்து கொண்டதாகவும், தம்மை எப்போதும் கீழ்த்தனமாக நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு தாம் தற்கொலை செய்து கொள்ள இருந்ததாகவும் ஆசிம் ரஷிக் கூறி இருந்தார். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது.
எனினும் இந்த புகாரை மறுத்த இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டார், அதே சமயம், நான் நிறவெறியுடன் இப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் சிக்கிய கேரி பெலன்ஸ், நிறவெறியுடன் தாங்கள் ரஷிக்குடன் நிறவெறியுடன் நடத்தினோம் என்று ஒப்பு கொண்டார்.
இதனையடுத்து கேரி பெலன்ஸ் மீது நடவடிக்கை எடத்த இங்கிலாந்த கிரிக்கெட் வாரியம், அவரை தேசிய அணிக்கு எடுக்கப்போவதில்லை என தெரிவித்தது. தற்போது மைக்கேல் வாஹன், டிம் பிரஸ்னன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு தண்டனை வழங்க இங்கிலாந்து வாரியம் முடிவு எடுத்துள்ளது.
இச்சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.