தமிழ்நாடு அணியின் புதிய பயிற்சியாளராக வெங்கட்ரமணா நியமனம்!

Updated: Sat, Jul 31 2021 22:08 IST
Image Source: Google

தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக டி. வாசு கடந்த 2019 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்த வருடம் தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது. அதேசயம 2019-20-ல் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போட்டிகளில் தமிழ்நாடு அணி 2ஆம் இடம் பிடித்தது. 

கடந்த சில வருடங்களாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழ்நாடு அணி 2016-17க்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து ஒரு மாற்றத்துக்காக  முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா, தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு ஒருநாள் ஆட்டத்தில் வெங்கட்ரமணா விளையாடியுள்ளார். 

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 20 முதல் தொடங்குகிறது. முதலில் சையத் முஷ்டாக் அலி அதன்பிறகு ரஞ்சி, விஜய் ஹசாரே போட்டிகள் நடைபெறுகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::