அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய முகமது கைஃப்!

Updated: Sat, Jan 28 2023 17:33 IST
Former India Players Slam Arshdeep Singh For No-ball Misery: 'He Needs To Work On Basics' (Image Source: Google)

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது. இலங்கை தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார்.

அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை