கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார்  - வாசிம் அக்ரம்!

Updated: Thu, Jun 01 2023 20:23 IST
Former Pakistan captain Wasim Akram heaps massive praise on CSK star (Image Source: Google)

16ஆவது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை துவங்கியது. பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5வது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரே தற்போது வரை கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம், சென்னை அணியின் நடத்திர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டை பாராட்டி பேசியுள்ளார்.

ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், “ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இக்கட்டான பல போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ருத்துராஜ் கெய்க்வாட், பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் மிக மிக சிறப்பாக செயல்படுகிறார். 

கூடுதலாக ருத்துராஜ் கெய்க்வாட் முழு உடற்தகுதியுடன் பிட்டாகவும் உள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட்டின் தற்போதைய வயதும்ம் மிக குறைவு தான் என்பதால் அவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக இந்திய அணியின் மிக சிறந்த வீரராக உருவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை