ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?

Updated: Sun, Nov 26 2023 15:59 IST
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே? (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ். தற்போது 34 வயது பிரிட்டோரியஸ் 2016 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்டுகள், 27 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய (பாகிஸ்தானுக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்) வீரராகவும் உள்ளார்.  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 164 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் என்கிற பெயரைப் பெற்றிருந்தார்.  

அதன்பின் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2023இல் ஓய்வு பெறுவதாக பிரிட்டோரியஸ் அறிவித்திருந்தார். அதன்பின் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரிடோரியஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆல்ரவுண்டரான இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் சிஎஸ்கே அணி இவரை அணியில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி சிஎஸ்கே. இது ஒரு காவியம். சிஎஸ்கேவில் இருந்தபோது உடனிருந்த பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி. இது ஒரு அற்புதமான அனுபவம். நான் நிறைய கற்றுக் கொண்டேன். 2024 சீசனுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். இவரது பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை