கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்!
அமிர் டிராகன்ஸ் மற்றும் பமிர் சாம்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. இதனை காண ஐநா அதிகாரிகள் மைதானத்துக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, ஐ.நா . அதிகாரிகளை குறிவைத்து போட்டி நடைபெற்று இருந்த போது திடீரென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வெடித்ததும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். மைதானத்தில் இருந்த வீரர்களுக்கும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தாக்குலில் 4 பார்வையாளர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஐநா அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் காபூல் நுழைவு வாயிலில் குருத்வார் ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
அதன் பிறகு தற்போது கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே, குண்டு வெடித்த போது எடுக்கப்பட்ட காணொலி, தற்போது வெளியாகியுள்ளது. அதில், பார்வையாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒரே வாரத்தில் 2 குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன. ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால், அங்கு எவ்வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.