Icc
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; ஆஸி - நெதர்லாந்து போட்டியும் ரத்து!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மீண்டும் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கினர்.