தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டர் வீசிய த்ரோவால் பவுமாவின் பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் 38 ரன்கள் எடுத்தபோது அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறைக்குத் திரும்பினார். பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து டெம்பா பவுமா சிகிச்சைக்காக தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பவுள்ளார் பவுமா. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அதன்படி இலங்கை அணிக்கெதிரான 2ஆவது மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அவர் செயல்படுவார். டி20 தொடருக்கான கேப்டன் பிறகு தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 31 வயது மகாராஜ் தென் ஆப்பிரிக்க அணிக்காக 36 டெஸ்டுகள், 12 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.