மீண்டும் சதமடித்து அசத்திய கஸ்டவ் மெக்கியான்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் ஃபிரான்ஸ் - நார்வே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபிரான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஃபிரான்ஸ் அணியில் கஸ்டவ் மெக்கியான் அதிரடியான ஆட்டத்தை மிரட்ட, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் வழக்கம்போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கஸ்டவ் மெக்கியான் 53 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களை பறக்கவிட்டதுடன், சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது இரண்டாவது சதம் இதுவாகும்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஃபிரான்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. நார்வே அணி தரப்பில் அப்துல்லா சின்வாரி, உஸ்மான் அரிஃப், முஷாட்ஃக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய நார்வே அணியும் சீரான் இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக குருகே அபேரத்ன 45 ரன்களையும், அன்சர் இஃக்பால் 28 ரன்களையும், உஸ்மான் அரிஃப் 26 ரன்களையும் சேர்த்தனார்.
இறுதியில் 19.2 ஓவர்களிலேயே நார்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தடுத்து. இதன்மூலம் ஃபிரான்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் நார்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
மேலும் இப்போட்டியில் சதமடித்த கஸ்டவ் மெக்கியான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் கஸ்டவ் மெக்கியான் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.