டி20 உலகக்கோப்பை: 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!

Updated: Thu, Sep 09 2021 13:56 IST
Image Source: Google

ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இத்தொடருக்கான அணியை அறிவித்துள்ளன. மேலும் நாளைக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை அறிவிக்க வேண்டுமென ஐசிசி கெடு விதித்துள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணியில் முஷ்பிக்கூர் ரஹீம், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

வங்கதேச அணி: மஹ்மூதுல்லா (கேப்டன்), நைம் ஷேக்,சௌமியா சர்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன்,மஹேதி ஹசன், நசும் அஹ்மது, முஸ்தாபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மது, ஷைஃபுதீன், ஷமிம் ஹொசைன்

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

ரிசர்வ் வீரர்கள்: ரூபெல் ஹொசைன், அமினுல் இஸ்லாம் பிப்லாப்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை