இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் ஆஷஸ் டெஸ்ட் 2-1 என்ற கணக்கில் உள்ளது.

Advertisement

இதுவரை 3 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. ஒரு பக்கம் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி முடிவெட்டியதற்கு பணம் கொடுக்கவில்லை என்று இங்கிலாந்து ஊடகங்கள் புதிய சர்ச்சையை உருவாக்கினர்.

Advertisement

இதுமட்டுமல்லாமல் களத்திலேயே 100ஆவது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சந்தித்து கொண்டவர். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.

அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார். இதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் காட்ட, உடனடியாக சுதாரித்த ரிஷி சுனக், சாண்ட்பேப்பரை மறந்துவிட்டதாக பதிலடி கொடுத்தார். இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து கலாய்த்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News