இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் இவர்கள் தான்; கௌதம் கம்பீர் உறுதி!

Updated: Mon, Jul 22 2024 15:37 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அவரது பயிற்சி காலமும் தொடங்குகிறது. 

அதேசமயம் இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அணியில் குழப்பம் நிடித்தது. ஏனெனில் இந்திய அணியின் புதிய பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்வதில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ இடையே முரன்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியானது. ஏனெனில் கௌதம் கம்பீர் தன்னுடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றிய வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் படி வலிவுறுத்தினார்.

அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டெஸ்காட்டே ஆகியோரை நியமிக்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ-க்கு இதில் உடன்பாடில்லாத காரணத்தினால் தான் இதுவரை மற்ற பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்றைய தினம் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அணியின் மற்ற பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த கேள்வியானது எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர்,  “இத்தொடர் உதவி ஊழியர்களின் முக்கிய அம்சமாக இருக்கும். நான் சொன்னது போல், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு அணியின் கூடுதல் பயிற்சியாளர் குறித்து முயற்சி செய்து முடிப்போம்.

ஆனால், அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் இதில் கைதேர்ந்த வல்லுநர்கள். ரியான் மற்றும் அபிஷேக் வெற்றிகரமான நிலைப்பாட்டை பெற முடியும் என்று நம்புகிறேன். பயிற்சியாளர்களாக நாங்கள் வெற்றிகரமான பதவிக் காலத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்.

பிசிசிஐ குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் எனது பெரும்பாலான கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டார். இந்தச் செய்திகளை எல்லாம் படிக்கும் போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அபிஷேக், உதவி பயிற்சியாளராக, ரியான், துணை பயிற்சியாளராக பணியாற்றுகின்றனர். உதவி பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை விட மூன்று துறைகளிலும் கவனம் செலுத்த முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதனால்தான் இப்போது இந்த இந்திய அணியில் இரண்டு உதவிப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம். மேலும் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சரியான துணைப் பணியாளரை நாங்கள் தேர்வு செய்வோம்” என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனூலம் இலங்கை தொடருகான இந்திய அணியின் துணைப்பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் ஆகியர் செயல்படவுள்ளது உறுதியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை