மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - சவுரவ் கங்குலி!

Updated: Fri, Jun 09 2023 13:02 IST
Ganguly takes a jibe at Dravid, Rohit after Lyon trapped Jadeja to reignite Ashwin debate! (Image Source: Google)

தற்பொழுது இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தப் போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமான புல் தரையாக இருக்கிறது என்று சொல்லப்பட்டது. இன்றைய நிலையில் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்திலும், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் இடத்தில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அஸ்வினை அணிக்கு எடுக்காதது பெரிய விமர்சனமாக இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கு பின்னால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஆப் ஸ்பின்னர் நாதன் லயன் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜாவின் விக்கட்டை வீழ்த்தியதும் இந்த விமர்சனம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “ஆஃப் ஸ்பின்னர் பச்சை ஆடுகளத்தில் விளையாட முடியாது என்று யார் சொன்னது?. மிகச் சிறப்பாக விளையாடி வந்த இடது கை பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவை ஆப் ஸ்பின்னர் நாதன் லயன்தான் வெளியேற்றினார். அவருக்கு டர்ன் மற்றும் பவுன்ஸ் இரண்டுமே இருந்தது.

அஸ்வின் போன்ற ஒரு மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. பின்னோக்கிப் பார்த்தால் ஜடேஜாவுக்கு மறுமுனையில் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கவில்லை. இந்த இடத்தில் அஸ்வின் இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். நினைவில் கொள்ளுங்கள் அஸ்வின் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே விக்கெட் எடுத்தவர் கிடையாது. அவர் ஆஸ்திரேலியாவிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். என்னை பொருத்தவரை அஸ்வின் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பந்துவீச்சாளர்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை