ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்?

Updated: Fri, Aug 18 2023 14:41 IST
ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்? (Image Source: Google)

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை வந்த அந்த அணி இம்முறை எலிமினேட்டர் வரை வந்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவரை கழற்றி விட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லாங்கரை புதிய தலைமைப் பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து தங்களின் ஸ்டேட்டர்ஜிக் ஆலோசகராக செயல்படுவார் என்று லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது எந்த வகையான வீரர்களை தேர்வு செய்து எப்படி அணியை உருவாக்குவது நுணுக்கங்கள் அடிப்படையில் அவர்களுக்கு எப்படி உதவுவது போன்ற அம்சங்களில் உதவுவதற்காக எம்எஸ்கே பிரசாத் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் போன்ற இதர பயிற்சியாளர்களுடன் இணைந்து அவர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டுவந்த கவுதம் கம்பீர், அந்த அணியிலிருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் கம்பீர் மீண்டும் கேகேஆர் அணிக்கு திரும்பு தகவலை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

அதேசமயம் இரண்டு ஆண்டுகளாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டுவந்த கவுதம் கம்பீர் அந்த அணியை விட்டு வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்துள்ளது. ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளும் லக்னோ அணியானது ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் லக்னோ அணியில் ஜஸ்டின் லங்கர் மற்றும் எம்எஸ்கே பிரசாத் வருகை காரணமாகவே கம்பீர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை