Justin langer
ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்?
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை வந்த அந்த அணி இம்முறை எலிமினேட்டர் வரை வந்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவரை கழற்றி விட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லாங்கரை புதிய தலைமைப் பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து தங்களின் ஸ்டேட்டர்ஜிக் ஆலோசகராக செயல்படுவார் என்று லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.