இந்திய அணிக்கு தேடலுக்கு கிடைத்த பரிசு ஷர்துல் - கவாஸ்கர் புகழாரம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்திய அணி பெற்ற இந்த வெற்றியில் ஷர்துல் தாகூரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஷர்துல் தாகூர் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்,“ஆஸ்திரேலிய தொடரின் போது கபா டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். அதே போன்று தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தது மட்டுமின்றி தனது பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டார். இவர் நிச்சயம் இந்திய அணி தேடும் நீண்டகால டெஸ்ட் பிளேயராக திகழ்வார்.
நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால் தற்போது அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறுகிறது. அதாவது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறார். அவரது பேட்டிங்கில் எந்த குறையும் நாம் சொல்ல முடியாது. அதே போன்று பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்படுகிறார். நிச்சயம் இது போன்ற வீரர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியமான ஒருவர்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அனைத்து இடங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தோன்றுகிறது. அதேபோன்று பந்துவீச்சிலும் அவரால் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை அளிக்க முடிகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் தேடலுக்கு கிடைத்த பரிசாக இந்த வீரர் திகழ்வார்” என தெரிவித்துள்ளார்.