சுப்மன் கில் தொடக்க வீரர் அல்ல - ககன் கோடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் கடந்த ஜூன் 18ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி, கோப்பையைத் தட்டிச்சென்றது.
இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு பதிலாக மயாங்க் அகர்வாலை அணியில் சேர்த்திருக்க வேண்டுமென முன்னாள் இந்திய தேர்வு குழு தலைவர் ககன் கோடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ககன் கோடா,“சுப்மேன் கில் ஒரு தொடக்க வீரர் அல்ல. அவர் வி.வி.எஸ் லக்ஷ்மன் போன்றவர். அவரை நடுத்தர வரிசையில் களமிறக்க வேண்டும். மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக செயல்படாததால், மயாங்க் அகர்வாலை அணியில் சேர்க்காதது நியாயாமில்லை.
அவரை நிச்சயம் இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதேபோல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் சரியாக செயல்படாத பிரித்வி ஷாவையும் அணியில் தேர்வு செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.