மேக்ஸ்வெல் தனது திறனை சரியாக பயன்படுத்துவதில்லை - வீரேந்திர சேவாக்!
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்சிபியின் இந்த வெற்றியைப் பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் கிலென் மேக்ஸ்வெல். அவர் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். மேலும் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த கலக்கல் ஆட்டத்தால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அவர் அறிவை சில நேரங்களில் பயன்படுத்துவதே கிடையாது. மும்பைக்கு எதிராக அவர் அறிவை பயன்படுத்தி நன்றாக விளையாடினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆட்டத்திற்குத் தகுந்தது போல அவர் தன் விளையாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார். அதனாலேயே பல போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிவிடுவார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மூலம் 2 மில்லியன் டாலர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், அதற்கு ஏற்றது போல் விளையாடுகிறாரா என்பது கேள்விக்குறியே' என்று தெரிவித்துள்ளார்.