வார்னர், மார்ஷ் இருவருக்கும் எதிராக பந்துவீச நான் எப்பொழுதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!

Updated: Thu, Sep 28 2023 11:54 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா அணி இந்தியா வருவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-3 என இழந்தது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயமாக தொடரில் முதல் இரண்டு போட்டிகளை அபாரமாக வென்று, கடைசி மூன்று போட்டிகளை மிக மோசமாக ஆஸ்திரேலியா தோற்று தொடரை இழந்தது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களில் பாதிக்கு மேல் யாரும் காயத்தால் இடம் பெறவில்லை. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை நடைபெற இருக்கும் இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா திட்டமிட்டது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் முயற்சிகள் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக தோற்று தொடரை இழந்தது. இதையடுத்து நேற்று மூன்றாவது போட்டியில் திரும்பி வந்த ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றி பெற்றதோடு உலக கோப்பைக்கு நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது.

போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னால் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இங்குள்ள வெயிலில் முதலில் பந்து வீசாததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் விளையாடாமல் இருந்தார்கள். இன்று மேக்ஸ்வெல் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஸ்டார்க் நல்ல ரிதத்தில் இருந்தார். 

டிராவிஸ் ஹெட் உலக கோப்பையின் தொடக்கத்தில் எங்களுக்கு கிடைக்க மாட்டார். வார்னர் மற்றும் மார்ஷ் இருவருக்கும் எதிராக பந்துவீச்சை தொடங்க நான் எப்பொழுதும் விரும்ப மாட்டேன். அது கவலைக்குரிய ஒரு விஷயம். கிட்டத்தட்ட முழு பலம் கொண்ட ஒரு அணியை களம் இறக்கி பெற்ற முதல் வெற்றி என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை