சிறந்த கெட்சுகளைப் பிடிப்பதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!

Updated: Tue, Oct 18 2022 12:08 IST
Image Source: Google

டி 20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாட 10 நாட்களுக்கு முன்பே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்றுவிட்டது.

நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணி வரும் 23ஆம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு 2 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு சிறந்த கேட்ச்களை பிடிப்பதே எனது இலக்காக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

பேசிய அவர், “கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். எனது உடற்தகுதி உயர்ந்துள்ளது. எங்கள் பயிற்சியாளருடன் எனது பீல்டிங்கில் அதிக நேரம் செலவிட முடிகிறது. நான் எப்போதும் ஒரு பீல்டராக இயல்பாகவே இருந்தேன். ஆனால் நான் விதிவிலக்காக இருக்க விரும்புகிறேன். இப்போது எனது திறமைக்காக சிறிது நேரம் செலவழித்து அந்த கடினமான கேட்சுகளை பெற முடிகிறது. 

எனக்கு தெரிந்த ஹர்திக், டைவ் செய்து பந்துகளை நிறுத்துவது வழக்கம். இந்த ஆண்டு எனது குறிக்கோள் எனது சிறந்த கேட்ச்களில் ஒன்றாக கீழே செல்லக்கூடிய கேட்ச்சைப் பிடிப்பதாகும்” என பிசிசிஐ வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை