இந்த தோல்வியால் நாங்கள் சோர்ந்துபோக மாட்டோம் - ரோஹித் சர்மா

Updated: Mon, Mar 28 2022 10:20 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ்யை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த், மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் ஷர்மாவும் தனது பங்கிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்வி ஷா (38), செய்பர்ட் (21), மந்தீப் சிங் (0), ரிஷப் பந்த் (1) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிரடி வீரர் ரௌமேன் பௌலும் (0) ஏமாற்றினார். இதனால் ஸ்கோர் 72/5 என இருந்தது. அந்த சமயத்தில் லலித் யாதவ் (48), ஷர்தூல் தாகூர் (22), அக்சர் படேல் (38) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், டெல்லி அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனால், மும்பை அணி தொடர்ந்து 10ஆவது சீசனில் முதல் போட்டியில் தோற்றுள்ளது.

இப்போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, "இது உண்மையில் எங்களுக்கு ஏமாற்றமாகத் தான் உள்ளது. நாங்கள் பேட்டிங் செய்யும் போது தொடங்கிய விதமும் முடித்த விதமும் நன்றாகவே இருந்தது. 170-க்கும் மேல் ரன்கள் அடித்ததால் இந்த இலக்கு போதுமானதாக முதலில் தோன்றியது. ஆனால், களத்தில் எங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை. 

இந்த தோல்வியால் நாங்கள் சோர்ந்துபோக மாட்டோம். இது முதல் ஆட்டம்தான். இனி உள்ள அனைத்து மேட்ச்களிலும் வெற்றி அடையவே முயற்சிப்போம். முதல் போட்டியில் தோல்வி குறித்து கவலைப்பட மாட்டோம். இதுகுறித்து வரும் புள்ளி விபரங்களை நான் கண்டுகொள்வதே இல்லை" என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை