டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Feb 26 2024 16:18 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று அசத்திய இங்கிலாந்து, அதன்பின் நடைபெற்று மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 1-3 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தொடரையும் இழந்துள்ளது. இதன்மூலம் அந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து தங்களது முதல் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி என்று நினைக்கிறேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஸ்கோர்கார்ட் கூறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த ஆட்டத்தை சுருக்கமாகச் சொல்லும் அளவுக்கு அது போதிய மதிப்பை அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

இப்போட்டியில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான டாம் ஹார்ட்லி மற்றும் ஷோயப் பஷீர் இன்று மட்டுமல்ல, இந்த முழு டெஸ்ட் போட்டியின் போதும் அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு நான் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இப்படி செயல்பட்டு வருவது நம்பமுடியாதது.

இந்தியா போன்ற கடினமான பிட்ச்களில் இளம் வீரர்களை சுதந்திரமான விளையாட வைப்பது எனது கேப்டன்சியின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் தொடர் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நிறைய திறமையான இளம் வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன் நான். இப்போட்டியில் அனுபவமற்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாக தோன்றுகிறது.

மேலும், ஜோ ரூட்டின் பேட்டிங் குறித்து எழுந்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை அடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. அதேபோல் சோயப் பஷீர் தனது அறிமுக காலத்திலேயே இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதும், போட்டிகளில் வெற்றிபெறுவதும் தான் எங்களின் இலக்கு. நான் கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதில் வீரர்களுக்கு எனது செய்தி ஒன்று மட்டும் தான். அது, நாங்கள் களத்தில் எதையும் இழக்க போவதில்லை. இப்போட்டியிலும் நாங்கள் கடைசி வரை போராடினோம். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை