எப்போது வென்றாலும் நாங்கள் அணியாக வெல்கிறோம் - ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, May 11 2022 12:00 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குஜராத் டைடன்ஸ் அணி. நேற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள குஜராத்தும், லக்னோவும் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 82 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இதன் மூலம் குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது.

குஜராத் அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை படுகிறேன். 14 போட்டிகள் முடிவதற்குள் பிளே ஆப் சென்றுவிட்டோம். நாங்கள் வென்றாலும் சில போட்டிகளில் நெருக்கடிகளை சந்தித்தோம். இன்றைய ஆட்டத்தில் ஆக்கோரஷமாக இருக்க வேண்டும் என நினைத்தோம்.

சாய் கிஷோரை எப்போதும் நான் திறமையான வீரராக தான் மதிப்பிட்டுள்ளேன். எங்களுக்கு பலமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் சாய் கிஷோரை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைத்தையும் சரியாக செய்தனர்.

நாங்கள் எப்போதும் ஒரு அணியாக செயல்படுகிறோம். எப்போதும் வென்றால் கூட ஒரு அணியாக வெல்கிறோம். தோற்றாலும் கூட ஒரு அணியாக தோல்வி அடைகிறோம். ஒரு வீரரால் தான் தோற்றோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்போதும் அணியில் ஒருவருடன் இணைந்து மற்றொருவரும் நிற்கிறோம். இந்த உத்வேகத்தை தொடர்ந்து எடுத்து செல்வோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை