மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!

Updated: Fri, Oct 28 2022 17:04 IST
Image Source: Google

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கான நேரம் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆனால் அவை அனைத்தையுமே ஆஸ்திரேலியாவில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் கெடுத்து விடுகின்றன. இன்று காலை ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. இரு அணிகளுமே சம பலத்தில் இருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மதியம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை இருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த போட்டியிலும் மழையின் தாக்கம் இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் மழை கருணை காட்டாததால் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இதற்காக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். நடப்பு தொடரில் இதுவரை 14 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இதுவரை 4 லீக் போட்டிகள் மொத்தமாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டன. நிறைய போட்டிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை இருக்கும் என முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மெல்பேர்ன் நகரத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் எனக்கூறப்பட்டது. ஆனால் அதனை எதையுமே கண்டுக்கொள்ளாத ஐசிசி, போட்டி நடைபெறும் பகுதிகளை கூட மாற்றி அமைக்காமல் திட்டத்தின் படி சென்றது. இதனால் பல்வேறு போட்டிகளில் சரியான முடிவு எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை