முகமது ஷமியை டிரேடிங் செய்ய சில அணிகள் முயற்சித்தன - குஜராத் அணி சிஓஓ குற்றச்சாட்டு!

Updated: Thu, Dec 07 2023 12:24 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் போட்டிகளில் தான் வழக்கமாக சர்ச்சைகள் அதிகரிக்கும். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதற்கு ஐபிஎல் டிரேடிங் முறையை பின்பற்றாமல் சில அணிகள் ஐபிஎல் நிர்வாக குழு அமைத்த விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறை மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ரூ.15 கோடி பணம் கொடுத்து குஜராத் அணியிடம் இருந்து ஒப்பந்தம் செய்தது. இதற்கு ஐபிஎல் நிர்வாக குழுவும் அனுமதியளித்துள்ளது. அந்த விதிமுறையின் படியே டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களுக்கும், அந்த அணிக்கும் ஒப்பந்தம் செய்யும் அணி மிகப்பெரிய தொகையை கொடுக்கும். அதில் 10 முதல் 50 சதவிகிதம் வரை சம்மந்தப்பட்ட வீரருக்கும் அளிக்கப்படும்.

இந்நிலையில் தான் குஜராத் அணியின் முகமது ஷமியிடம் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்வதற்காக சில அணிகள் முயற்சிப்பதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணி நிர்வாகம் தரப்பில் முகமது ஷமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரிடம் டிரேடிங் முறையில் அணி மாறுவதற்காக பேசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ஐபிஎல் நிர்வாக குழு வகுத்துள்ள விதிகளின் படி, எந்த வீரரிடமும் அணி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. எந்தவொரு அணிக்கும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய உரிமை உள்ளது.

எங்கள் அணியில் முகமது ஷமி மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். அதேபோல் உலகக்கோப்பை தொடரிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களின் அணியின் மிகமுக்கியமான வீரர்களில் ஒருவர். இங்கு பிரச்சனை என்னவென்றால், அணி நிர்வாகங்கள் தரப்பில் நேரடியாக வீரர்களை தொடர்பு கொண்டு பேசுவது தான். பிசிசிஐ தரப்பில் டிரேடிங் முறைக்கு என்று தனியாக விதிகள் உள்ளது.

அதன்படி எந்த வீரரையாவது ஒப்பந்தம் செய்ய விரும்பினால், முதலில் பிசிசிஐ நிர்வாக குழுவிடன் தான் விண்ணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் சம்மந்தப்பட்ட அணிகளிடம் அந்த தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். அதனை மேற்கொள்ள வேண்டுமா அல்லது நிராகரிப்பதா என்பதை அந்த அணிகள் முடிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை