ஐபிஎல் 2025: கிளென் பிலீப்ஸ் விலகல்; தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Fri, Apr 18 2025 11:53 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொட்ரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருவது. 

அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 2 தோல்விகள் என 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக நாளை டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராட் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தாம் செய்யப்பட்டிருந்த கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிவுள்ளார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்  செய்து கொண்டிருந்த போது கிளென் பிலீப்ஸ் காயத்தை சந்தித்திருந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினர். 

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் திவீரமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் கிளென் பிலீப்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதுடன், நியூசிலாந்து திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கான மாற்று வீரராக இலங்கை அணியைச் சேர்ந்தா நட்சத்திர ஆல் ரவுண்டர் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய தசுன் ஷனகா, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படமால் இருந்தார். இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி தசுன் ஷனகாவின் ஆரம்ப தொகையான ரூ.75 லட்சத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அவர் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால், நிச்சயம் லெவனிலும் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புள் அதிகரித்துள்ளன.

Also Read: Funding To Save Test Cricket

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், தசுன் ஷனகா, கரீம் ஜனத், குல்வந்த்யா கே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை