ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் துணை பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம்!

Updated: Wed, Nov 13 2024 20:51 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்து. இதில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லை ரூ.16.50 கோடிக்கும், சாய் சுதர்ஷனை ரூ.8.50 கோடிக்கும், ராகுல் திவேத்தியா மற்றும் ஷாருக் கான் ஆகியோரைத் தலா ரூ.4 கோடிக்கும் என குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவிடுதுள்ளது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இருப்பினும் அந்த அணி எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்கச்செய்துள்ளது. அந்தவகையில் அந்த அணி தங்களது பயிற்சியளார் குழுவில் முன்னாள் இந்திய விரரான பார்த்தீவ் படேலை இணைத்துள்ளது. 

அதன்படி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணிக்காக 2002ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விளையாடிய பார்த்திப் படேல், இடைபட்ட காலத்தில் 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி 1600க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளர்.

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக 139 போட்டிகளில் விளையாடியுள்ள பார்த்தீவ் பாடேல், 2848 ரன்களை அடித்துள்ளர். இதுதவிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று ஆண்டுகள் இளம் வீரர்களை தேர்வு செய்யும் பணியிலும், கடந்தாண்டு ஐஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை