தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!

Updated: Tue, May 30 2023 12:28 IST
Image Source: Google

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இந்ததோல்வி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா,“நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் எப்படி ஒன்றாக வெல்கிறோமோ, அதேபோல் ஒன்றாகவே தோற்கிறோம். தோல்விக்கு எந்த காரணங்களையும் கூற விரும்பவில்லை. சிஎஸ்கே அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. எங்கள் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சாய் சுதர்சன் ஆட்டம் மிரட்டலாக இருந்தது.

எங்கள் அணியில் அனைத்து வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வாய்ப்பை மட்டுமே அளித்தோம். மோஹித் சர்மா, கில், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் அடைந்துள்ள வெற்றி, அவர்களின் வெற்றிதான். எம்எஸ் தோனியின் இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. நான் தோல்வியடைய வேண்டுமென்றால், அவரிடம் தான் தோல்வியடைவேன். நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் சிறந்தவர் தோனி தான். எங்களை விடவும், தோனிக்கு கடவுள் அதிகமாக கருணை காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை