ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கிய தவான்; குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள் ஆகியைவைகாக மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த சச்சின், விராட் கோலி, நிகோலஸ் பூரண், பேட் கம்மின்ஸ், பிரட் லீ ஆகியோர் உதவி செய்திருந்தனர். ஆனால் ஷிகர் தவான் ஒரு முறை நிவாரணம் வழங்கியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவான், சமீபத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூ செலுத்திக் கொண்டார். ஏற்கெனவே கரோனா நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய அவர், அதுப்போக, ஐபிஎல் 2021 தொடரில் அவர் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஆக்சிஜன் கான்சன்டேட்டர்களை வழங்கியுள்ளார். அவற்றினை குருகிராம் நகர காவல்துறையினருக்கு அவர் அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதற்கு பதிலளித்துள்ள ஷிகர் தவான்,“தற்போதுள்ள கடினமானச் சூழலில் இது போன்ற சிறு உதவிகளைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என் நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். கரோனாவுக்கு எதிரான பேரழிவிலிருந்து இந்தியா மீண்டு வந்து மீண்டும் ஜொலிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்