தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!

Updated: Wed, Aug 10 2022 13:48 IST
'Guys Like Suryakumar Yadav Are The Actual Finishers'; Srikkanth Comments On Dinesh Karthik (Image Source: Google)

ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பது இந்திய அணியை தான் பலவீனப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் எந்த இடத்தில் களமிறக்க போகிறார்கள் என தெரியவில்லை. 8ஆவது இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் களமிறங்குவார். அதன்பிறகு புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் களமிறங்குவார்கள். 7ஆவது இடத்தில் ஜடேஜா களமிறங்குவார். தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்றால் பந்துவீச்சாளர் ஒருவரை எடுத்தாக வேண்டிய நிலை ஏற்படும், அது இந்திய அணிக்கு தான் பிரச்சனையாக அமையும். 

என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக்கை ரிசர்வ் வீரரான வேண்டுமானால் தேர்வு செய்திருக்கலாம், அதே போல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது. மேலும் தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல் ஒரு பினிஷர். ரோஹித் சர்மா ஒரு பினிஷர். அவர்கள் தொடக்க வீரர்களாக களமிறங்கினாலும் ஆட்டத்தின் இறுதிவரை விளையாடக்கூடிவர்கள். தற்போதுள்ள அணியின் பினிஷர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான்” என தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

கூடுதல் வீரர்கள் - ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை