ஹனுமா விஹாரி நீக்கப்பட்டது தவறு - ஹர்ஷா போக்லே

Updated: Sat, Nov 13 2021 12:37 IST
Hanuma Vihari omitted from the Test squad against New Zealand (Image Source: Google)

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த டி20 தொடருக்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. 

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித், ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் நிபுணருமான ஹர்ஷா போக்லே தனது பங்கிற்கு அவருக்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டதாவது, “விகாரியை நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஏன் சேர்க்கவில்லை ? என்ற காரணத்தை யாரும் தெரிவிக்கவில்லை. அவர் தற்போது எந்த போட்டியிலும் விளையாடாமல் இருப்பதால் அவரை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறார்கள் ? என்பதும் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது அவர் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸ் ஒரு ஹீரோயிக் இன்னிங்ஸ் என்றும் அதற்குப் பிறகும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் மறுக்கப்பட்டு வருவது தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: T20 World Cup 2021

ஏற்கனவே இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்திய ரசிகர்கள் ஹனுமா விஹாரியை ஏன் அணியில் சேர்க்கவில்லை ? என்று அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை