பிசிஏவில் சட்டவிரோத் செயல்கள் நடைபெறுகின்றன - ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு!

Updated: Sat, Oct 08 2022 11:18 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருதாக ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த கடிதத்தில் சங்கத்தில் நடைபெற்று வரும் மோசடிகள், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்து விவரமாக ஹர்பஜன்சிங் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு சங்கத்தில் சேர்க்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முயற்சித்து வருவதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் நடைபெறும் என்று ஹர்பஜன் கடிதத்தில கூறியுள்ளார். ஆனால் இதனை பொதுக்குழுவின் சம்மதம் ஏதுமில்லாமல், சங்க நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதாகவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்த செயல் பிசிசிஐயின் சட்டங்கள், வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு முரண்பாடாக நடக்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தங்களுடைய மோசடிகளை மறைப்பதற்காக, முறையான சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை நிர்வாகிகள் கூட்டவில்லை என்றும், தன்னிச்சையாக சிலரின் சுயநலத்திற்காக சங்கம் இயங்கி வருவதாகவும், ஹர்பஜன் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், “கடந்த 10-15 நாட்களாக எனக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சங்கத்தில் தலைமை நிர்வாகத்தில் இருப்பவர்கள் என்ன மாதிரி செயல்படுகிறார்கள் என்பது குறித்து புகார்கள் வந்துள்ளன. நான் சங்கத்துடைய தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதன் அடிப்படையில் நான் பணியாற்றுகிறேன்.

மோசடிகளை தடுப்பதற்காக எனக்கு தனிப்பட்ட நபர்களுக்கு கடிதம் எழுதுவதை தவிர்த்து வேறு வழி கிடையாது. இதேபோன்று இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் இடமும் தெரிவித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை