இவர் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Mar 14 2023 11:26 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதேசமயம் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது பார்க்கப்படுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலியில், சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சிரமாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா இருப்பார் என்றும், வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை டெவான் கான்வே, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி, மகிஷ் தீக்ஷனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “ஜடேஜாவைப் போல் சிறந்த ஆல்ரவுண்டர் உலக கிரிக்கெட்டில் இப்போது இல்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும், பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். பீல்டிங்கிலும் அசத்தும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என ஆணித்தரமாக சொல்லுவேன். சிஎஸ்கே பிளேயிங் லெவனை பொறுத்தவரை வெளிநாட்டு பிளேயர்கள் இடத்தில் இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் தோனி, அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே, தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை