ஆஸி ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழப்பு - கண்ணீரில் கிரிக்கெட் உலகம்!

Updated: Sun, May 15 2022 12:14 IST
Harbhajan Singh Pays Tribute To Aussie Legend Andrew Symonds (Image Source: Google)

உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே இயற்கை எய்திய நிலையில், சைமண்ட்ஸ் மரணம் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

சைமண்ட்ஸ் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சக ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட், “இந்த செய்தி மிகவும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையான, நட்பான, அனைவரிடமும் சகஜமாக பழகும் நண்பன் குறித்து தற்போது நினைத்து பார்க்கிறேன். நண்பருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“காலை எழுந்ததும் இந்த செய்தி பெரிய இடி போல் இறங்கியது, உன்னை மிஸ் செய்யப்போகிறேன் நண்பா” என்று ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார். “இதயம் நொறுங்கிவிட்டது. 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற மற்றொரு ஹிரோவையும் ஆஸ்திரேலியா இழந்துவிட்டதாக” மைக்கேல் பெவன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள பதிவில், “சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் இருவருக்குள் நல்ல நட்பு மற்றும் உறவு களத்திலும், களத்திற்கு வெளியேவும் இருந்தது. சைமண்ட்ஸ் குடும்பத்திற்காக என் பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“காலையில் எழுந்ததும் அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளேன்.அமைதியில் இளைபாருங்கள் என் நண்பா” என்று விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதே போன்று கும்ப்ளேவும் சைமண்ட்ஸ் குடும்பத்திற்கு தனது டிவிட்டர் பதிவு மூலம் ஆறுதல் கூறியுள்ளார். இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹன், “நீங்கள் இல்லாதது நிஜம் என்று நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

சைமண்ட்ஸை திட்டியதாக சர்ச்சையில் சிக்கிய ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள பதிவில், சைமண்ட்சின் திடீர் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சைமண்ட்ஸ் மிக விரைவில் சென்றுவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்ட ஹர்பஜன், சைமண்ட்ஸ்க்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை