இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்!

Updated: Mon, Nov 08 2021 18:43 IST
Image Source: Google

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடைந்த படுதோல்விகளின் விளைவாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேற வேண்டியதாயிற்றூ.

இந்திய அணி சரியாக விளையாடமல் தோற்றதற்கு தவறான அணி தேர்வே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்களை இந்திய மெயின் அணியில் எடுக்காதது, அஷ்வினை முதல் 2 போட்டிகளில் ஆடவைக்காதது, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தது, சாஹலுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ராகுல் சாஹரை ஆடவே வைக்காதது, விக்கெட் வீழ்த்த திணறிய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் வாய்ப்பளித்தது என இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட தவறுகளை செய்தது.

இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், இந்திய அணி தேர்வை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங். குறிப்பாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், “யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்ததற்கு, அவர் வேகமாக பந்துவீசுவதுதான் காரணம் என்று கூறினர். ராகுல் சாஹரை டி20 உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்த பின்னர், சாஹல் ஐபிஎல்லில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் சாஹரை ஆடவைப்பதுபோல் அணியில் எடுத்துவிட்டு, அவரை ஒரு போட்டியில் கூட ஆடவைக்கவில்லை. 

Also Read: T20 World Cup 2021

உண்மையாகவே, சாஹலை விட ராகுல் சாஹர் சிறந்த ஸ்பின்னர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சாஹல் அபாயகரமான பவுலர். இந்திய அணிக்காக கடந்த காலங்களில் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை