கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
இதுவரை 103 டெஸ்ட், 236 ஒரு நாள் போட்டிகள் 28 டி-20 போட்டிகளில் விளையாடி 707 விக்கெட்டுகளை எடுத்துள்ள 41 வயதான ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேலும் இவர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மஹாராஜாஸ் அணிக்காவும் விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.