நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, May 21 2023 23:26 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இதில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும் மும்பை அணி களமிறங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 201 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசி போட்டியை அபாரமாக பினிஷ் செய்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கேமரூன் கிரீன்(100) மற்றும் சூரியகுமார் யாதவ்(25) இருவரும் களத்தில் நின்றனர். 

இதில் 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 18ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பவுண்டரி அடிக்க வாய்ப்பிருந்தும், 99 ரன்களில் இருந்த கிரீன் சதமடிக்க வேண்டுமென்று சிங்கிள் எடுத்துக்கொடுத்தார். கடைசியில் கிரீன் தனது முதல் ஐபிஎல் மற்றும் டி20 சதத்தை அடித்தார்.

போட்டி முடிந்தபின் பேசிய சூர்யகுமார் யாதவ், “என்னுடைய கிரிக்கெட் கரியரில் நான் அடித்த மிகவும் கடினமான சிங்கிள் இதுதான். இன்று ஆடிய விதத்தினால் கேமரூன் கிரீன் சதமடிக்க தகுதியானவர். அந்த தருணத்தில் நெட் ரன்ரேட் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆகையால் கிரீன் சதமடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். இந்த பிட்ச்சில் 200-210 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் எளிதாக அந்த இலக்கை எட்டமுடியும் என்று உணர்ந்தேன்.

சீசன் தூங்குவதற்கு முன்பு நான் மோசமாக விளையாடி வந்தேன். அப்போது அறையில் அமர்ந்து, என்ன நடந்தது? என்று நினைத்தேன். அதன்பிறகு எனக்கு என்ன சரியாக வரும்? நான் நன்றாக விளையாடியபோது என்னென்ன செய்தேன்? என்பதில் கவனம் செலுத்த நினைத்தேன். அதன்படி இந்த சீசன் எனக்கு நன்றாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இருப்பினும் இங்கிருந்து பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை