சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, Aug 03 2022 16:32 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 165 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 19 ஓவர்களில் 195 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார். ஆட்டத்தின் 8ஆவது ஓவரில் பிராண்டன் கிங் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். இது டி20 கிரிக்கெட்டில் ஹர்திக்கின் 50ஆவது விக்கெட் இதுவாகும். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட் மைல்கல்லை எட்டிய 8ஆவது வீரர் ஹர்திக் பாண்டியாவாகும். இவருக்கு முன்பாக பும்ரா, யுவேந்திர சாஹல், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் எடுத்துள்ளனர்.

ஆனால் பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா 800 ரன்களை ( 802 ) கடந்துள்ளார். இந்திய டி20 வரலாற்றில் 50 விக்கெட்கள், மற்றும் 800 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை ஹர்திக் பாண்ட்யாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. முன்னணி வீரரான ஜடேஜா கூட இதுவரை இந்த மைல்கல்லை எட்டவில்லை.

சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் 9ஆவது வீரர் ஹர்திக் பாண்டியா ஆகும். இதற்கு முன்பாக ஷகிப் அல் ஹசன், சாஹித் அஃப்ரிடி, டுவைன் பிராவோ, ஜார்ஜ் டாக்ரெல், முகமது நமி, முகமது ஹஃபீஸ், கெவின் ஓ பிரைன், திஷாரா பெராரா ஆகியோர் அடித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் பாதிக்கப்பட்டு, இந்திய அணியில் இருந்தே ஒதுக்கப்பட்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. அதன்பின் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக தனது புதிய பாதையை தொடங்கிய அவர், இந்திய அணியில் மீண்டும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை