சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, Feb 19 2025 16:32 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, சவுரவ் கங்குலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு.

அதன்படி ஐசிசி சாம்பியன்ஸ்  கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தனது பெயரில் வைத்துள்ளார். இந்திய அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 17 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் சவுரவ் கங்குலியின் இந்த சாதனையை ஹார்டிக் பாண்டியா முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக 5 போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் மட்டும் 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் மேலும் 8 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சௌரவ் கங்குலியின் இந்த சிக்ஸர் சாதனையை முறியடிப்பார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் 15 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்

இதுதவிர்த்து ஹார்டிக் பாண்டியா நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 87 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2000 ரன்களை பூர்த்தி செய்வார். அதேசமயம் அவர் மேலும் 13 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்வார். இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை