பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!

Updated: Wed, Aug 09 2023 15:26 IST
Image Source: Google

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற விண்டீஸ் அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் நேற்று மூன்றாவது போட்டியில் பலப்பரிட்சை நடத்தியது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 150 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்ற நினைத்தபோது 19வது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் இரண்டு சிக்சர்கள் கொடுத்து, 2 ஒய்டு பந்துகளை வீச ஒரே ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார் ரோவ்மன் பவல். இறுதியில் 159 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு டஃப் ஸ்கோரை விண்டீஸ் அணி.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் 1, 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற முதலிரண்டு போட்டிகளை போலவே ஆட்டம் கண்டது இந்தியா. பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் திலக்வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் சூர்யகுமார் யாதவ் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.

சதமடிப்பார் என்று நினைத்த போது 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 83 ரன்களில் வெளியேறினார் சூர்யா. சூர்யாவை இழந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் பொறுப்புடன் கடைசிவரை களத்தில் நின்று வெற்றியை தேடித்தந்தார். முடிவில் இந்தியா 17.5 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி வெற்றிபெற கடைசி 18 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது திலக் வர்மா 47 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 18ஆவது ஓவரில் திலக் வர்மா 2 சிங்கிள்களை எடுத்து 49 ரன்களுக்கு சென்றார். அப்போது வெற்றிபெற 14 பந்துகளில் 2 ரன்கள் இருந்தது. இந்தநிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிங்கிளிற்கு சென்று திலக் வர்மாவை அரைசதம் அடிக்க வழிவிடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்த ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஹர்திக் சிங்கிளிற்கு செல்லாமல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அவரின் இந்த செயல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திலக் வர்மா இந்த டி20 தொடரில் தான் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். முதல் போட்டியில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 39 ரன்களும், இரண்டாவது போட்டியில் 5 பவுண்டரிகள், 1 சிச்கர் விளாசி அரைசதமும் அடித்து அசத்தியிருந்தார். தற்போது இந்த போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தால் ஒரு இளம் வீரருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட உத்வேகமாக இருந்திருக்கும். அதேபோல தொடர்ந்து மூன்று டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் திலக் வர்மா, ரோஹித் சர்மாவிற்கு பிறகு இதை செய்த இரண்டாவது பேட்ஸ்மேனாக மாறி அசத்தியுள்ளார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இப்படி செயல்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2014 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற 173 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி. அதன்பின் 173 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்வார். அப்போது 18.5 ஓவரிலேயே இந்தியா 172 ரன்களை எட்டிவிடும், களத்தில் 68 ரன்களுடன் கோலியும், 0 ரன்னில் தோனியும் இருப்பார்கள். வெற்றிபெற ஒரு ரன் தான் தேவையிருந்த போது 19ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தோனியே போட்டியை முடித்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை