தென் ஆப்பிரிக்கா தொடரில் பாண்டியா விளையாடுவது சந்தேகம்?

Updated: Tue, Nov 23 2021 15:26 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் உடற்தகுதி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17 அன்று தொடங்கும் தொடர், ஜனவரி 26 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலும் பாண்டியா இடம்பெற மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரில் உள்ள என்.சி.ஏ.வுக்குச் சென்று உடற்தகுதியை பாண்டியா நிரூபிக்க வேண்டும் எனத் தேர்வுக்குழுவினர் விரும்புவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ஓய்வு பொறுத்துதான் காயத்திலிருந்து எவ்வளவு விரைவாக பாண்டியா மீண்டு வருகிறார் எனத் தெரியும். என்.சி.ஏ.வுக்கு விரைவில் அவர் செல்லவுள்ளார்.  உடற்தகுதியைக் கொண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு அவரை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும். 

Also Read: T20 World Cup 2021

தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான உடற்தகுதி பாண்டியாவிடம் இல்லை. காயத்திலிருந்து குணமாக இன்னும் சிறிது காலமாகும். உடற்தகுதியை நிரூபித்து விளையாட அவர் தயாராகிவிட்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை