இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்-ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுப்பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்து வீசாமல் இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது பந்து வீசுவார் என்று உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஹார்டிக் பாண்டியா ஒரு சில ஓவர்களை மட்டுமே அந்த தொடரில் வீசியது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

Advertisement

மேலும் உலக கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது பிசிசிஐ-யின் தலைமை தேர்தல் அதிகாரி சேத்தன் சர்மா பாண்டியா ஆல்ரவுண்டராக விளையாடுவார் என்றும் ஒவ்வொரு போட்டியிலும் பாண்டியா நான்கு ஓவர் வீசுவார் என்றும் கூறி அவரை அணியில் இணைத்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் வெகு சில ஓவர்கள் மட்டுமே அவர் வீசியதால் அந்த விசயம் பெரிய விவகாரமாக மாறியது.

Advertisement

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தன்னை தேர்வு செய்தது குறித்து ஹார்திக் பாண்டியா தற்போது சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் உலகக்கோப்பை அணிக்காக தேர்வான போது என் மீது அனைத்து விசயங்களும் திணிக்கப்பட்டதாக தெரிகிறது. நான் அந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். நிச்சயம் ஆல்-ரவுண்டராக நான் விளையாடவில்லை. முதல் போட்டியில் இருந்தே நான் பந்துவீச முயற்சித்தாலும் என்னால் முடியவில்லை.

இருப்பினும் என் மீது உள்ள அழுத்தத்தின் காரணமாக சில போட்டிகளில் பந்து வீசினேன். தற்போது நான் மீண்டும் ஒரு ஆல்-ரவுண்டராக விளையாட நினைத்தே இந்திய அணியில் இருந்து ஒதுங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது நல்ல நிலையுடன் இருப்பதாகவும் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நாட்டில் இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக நிச்சயம் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நான் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே கடினமாக உழைத்து வருகிறேன்.

உலக கோப்பையை இந்திய அணிக்காக பெற்று தரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்த வகையில் நான் நிச்சயம் இந்திய அணி பெருமை அடையும் படி செயல்படுவேன். எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை ஜெயிப்பது தான் என்னுடைய இலக்கு” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News